திருட்டுப்பயலே-2
‘திருட்டுப்பயலே-2’ படத்தில் கதாநாயகனாக பாபிசிம்ஹா; வில்லனாக பிரசன்னா!
ஜீவன், அப்பாஸ், சோனியா அகர்வால், மாளவிகா நடித்து, சுசிகணேசன் டைரக்ஷனில் வெளிவந்து வெற்றி பெற்ற படம், ‘திருட்டுப் பயலே.’ இந்த படத்தின் இரண்டாம் பாகம், ‘திருட்டுப்பயலே-2’ என்ற பெயரில் தயாராகிறது.
இதில் பாபிசிம்ஹா கதாநாயகனாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்து இருக்கிறார்கள். அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ஓ.ஏ.கே.சுந்தர், முத்துராமன், ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
வித்யாசாகர் இசையமைக்க, செல்லதுரை ஒளிப்பதிவு செய்திருக்கிகிறார். ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கிறார். சுசிகணேசன் டைரக்டு செய்திருக்கிறார்.
படத்தை பற்றி டைரக்டர் சுசிகணேசன் கூறியதாவது:-
“திருட்டுப்பயலே படத்தின் கதைக் கருவை பயன்படுத்தி, அதன் இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. ஒருவரின் ரகசியத்தை தெரிந்து கொண்டு மிரட்டும் கதையம்சம் கொண்ட படம், இது. படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி, பாங்காக் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது. படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது.
ஆகஸ்டு மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.”

Related Tags :
Next Story