மேயாத மான்


மேயாத மான்
x
தினத்தந்தி 4 July 2017 3:24 PM IST (Updated: 4 July 2017 3:23 PM IST)
t-max-icont-min-icon

சொந்த பட தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், ‘ஸ்டோன் பெஞ்ச்’ என்ற சொந்த பட நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.

இந்த நிறுவனம் சார்பில் பல குறும் படங்கள் தயாரிக்கப்பட்டன. கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த கட்ட முயற்சியாக, வெள்ளித்திரை யிலும், டிஜிட்டல் உலகிலும் கால் பதிக்கிறார்.

‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் சார்பில் அவர் 2 படங்களை தயாரிக்கிறார். அதில் ஒரு படத்தின் பெயர், ‘மேயாத மான்.’ இன்னொரு படத்தின் பெயர், ‘மெர்குரி.’
‘மேயாத மான்’ படத்தில் வைபவ், பிரியாமணி, பவானி ஷங்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். விது ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார் ஆகிய இருவரும் இசையமைக் கிறார்கள்.

‘மெர்குரி’ படத்தை கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்கிறார். கதாநாயகனாக பிரபுதேவா நடிக்கிறார். தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் தினேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
1 More update

Next Story