தோட்டம்


தோட்டம்
x
தினத்தந்தி 4 July 2017 3:41 PM IST (Updated: 4 July 2017 3:41 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் படத்தில் சீன நடிகை! மலேசிய தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை சித்தரிக்கும் வகையில், ‘தோட்டம்’ என்ற படம் தயாராகி இருக்கிறது.

 இதில், சிங்கை ஜெகன் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கே.எஸ்.மணியம் நடிக்கிறார். விவியாஷான் என்ற சீன நடிகை கதாநாயகியாக நடிக்கிறார். சாய் இசையமைக்க, கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், அரங் கண்ணல் ராஜ். படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-

“ஒவ்வொரு நாடும் பொருளாதார முன்னேற்றம் அடைவதே அந்த நாட்டின் விவசாய வருமானத்தை கொண்டுதான். இலங்கை, மலேசியா போன்ற நாடுகள் இதில் அடங்கும். அங்கு கூலி தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டவர்கள் பெரும்பாலும் தமிழர்களே. அவர்கள் உழைத்து உருவாக்கிய தோட்டங்கள் பெரும் வணிக சந்தையாகி விட்டன. தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை மட்டும் அதே நிலையில்தான் இருக்கிறது.
கை மாற இருந்த ஒரு தோட்டத்தை ஒரு இளைஞனும், அவனின் நண்பர்களும் எப்படி போராடி மீட்கிறார்கள்? என்பதே கதை. இந்த படம், உலகம் முழுவதும் விரைவில் வெளியாக இருக்கிறது.”

Next Story