மேல்நாட்டு மருமகள்


மேல்நாட்டு மருமகள்
x
தினத்தந்தி 4 July 2017 3:51 PM IST (Updated: 4 July 2017 3:51 PM IST)
t-max-icont-min-icon

சிறுத்தையிடம் இருந்து தப்பிய படக்குழுவினர் உதயா கிரியேஷன் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார்.

பிரான்சு நாட்டை சேர்ந்த ஆண்ட்ரீயன் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி எம்.எஸ்.எஸ். டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு கோத்தகிரியில் நடந்தது. அப்போது நடந்த ஒரு திடுக்கிடும் சம்பவம் பற்றி டைரக்டர் எம்.எஸ்.எஸ். கூறுகிறார்:-

“கோத்தகிரியில், “யார் இவளோ” என்ற பாடலை படமாக்கி வந்தோம். மழை வருவது போல் வானம் இருட்டியதால், சீக்கிரமே படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நாங்கள் தங்கியிருந்த நண்பரின் வீட்டுக்கு திரும்பி விட்டோம். காலையில் விழித்துப் பார்த்தபோது, வீட்டின் முன்னால் படுத்திருந்த நாயை காணவில்லை.

உடனே அந்த நண்பர் வீட்டில் இருந்த சி.சி.டி.வி. பதிவை எடுத்துப் பார்த்தபோது, அதிர்ந்து போனோம். இரவு 11 மணி அளவில் ஒரு சிறுத்தை புலி வந்து அந்த நாயை அடித்து இழுத்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது. நாங்கள் முன்னதாகவே வீடு திரும்பி விட்டதால், உயிர் தப்பினோம்.
சென்னை, மகாபலிபுரம், திருச்சி, தஞ்சை ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.”
1 More update

Next Story