சக்க போடு போடு ராஜா


சக்க போடு போடு ராஜா
x
தினத்தந்தி 6 July 2017 4:05 PM IST (Updated: 6 July 2017 4:04 PM IST)
t-max-icont-min-icon

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, ‘சக்க போடு போடு ராஜா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில், கதாநாயகியாக வைபவி நடிக்கிறார்.

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சக்க போடு போடு ராஜா’

விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். வி.டி.வி.கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், ரோபோ சங்கர், மயில்சாமி, சஞ்சனா சிங் ஆகியோரும் நடிக்கின்றனர். வில்லனாக சம்பத் வருகிறார். இந்த படத்தை ஜி.எல்.சேதுராமன் இயக்கு கிறார். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்கிறார். வி.டி.வி. புரொடக்‌ஷன் சார்பில் வி.டி.வி.கணேஷ் தயாரிக்கிறார். படத்தை பற்றி சந்தானம் சொல்கிறார்:-

“இது, குடும்பத்தோடு ரசிக்கும் நகைச்சுவை படமாக தயாராகி வருகிறது. பிரச்சினை இல்லாத மனிதன் கிடையாது. அந்த பிரச்சினைகளை சிரித்தே எதிர்கொள்வது, படத்தின் கருவாக இருக்கும். நானும், விவேக்கும் எதிர்பாராமல் சந்திக்கிறோம். எங்களுக்குள் ஏற்படும் சச்சரவுகள்தான் கதை.”
“நானும், சந்தானமும் இணைந்து நடிப்பது மற்ற நடிகர்களும் சேர்ந்து நடிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும்” என்கிறார், விவேக். 
1 More update

Next Story