மகேந்திரா

‘ரா ரா கிருஷ்ணய்யா,’ தமிழில், ‘மகேந்திரா’ ஆனது ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்த ‘ரா ரா கிருஷ்ணய்யா’ என்ற தெலுங்கு படம், ‘மகேந்திரா’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
இந்த படத்தில், ‘மாநகரம்’ புகழ் சந்தீப் கிஷன்-ரெஜினா ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். மகேஷ்பாபு டைரக்டு செய்திருக்கிறார். என்.சாய்ராம் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பு: எஸ்.ராஜேஷ், ராஜஸ்ரீ, மணிகண்டன்.
தீயவர்கள் நிறைந்த ஒரு குடும்பத்தில் விதிவிலக்காக ஒரு சிறுவன் மட்டும் நல்லவனாக இருக்கிறான். அவனை தங்கள் வழிக்கு கொண்டுவர குடும்பத்தினர் முயற்சிக்க-குடும்பத்தினரை தன் வழிக்கு கொண்டுவர அவன் முயற்சிக்கிறான். இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே ‘மகேந்திரா’ படத்தின் கதை. இதற்குள் காதலும் இருக்கிறது. நகைச்சுவையும் இருக்கிறது என்கிறார், டைரக்டர் மகேஷ்பாபு.
மேலும் இவர் கூறும்போது, “பாகுபலியில் பிரபாசின் கதாபாத்திர பெயரான மகேந்திர பூபதியைத்தான் ‘மகேந்திரா’வாக்கி இருக்கிறோம். ‘பாகுபலி’யில் எப்படி தீய சக்திகள் அழிய வேண்டும் என்று பிரபாசின் கதாபாத்திரம் போராடியதோ, அதுபோல் சந்தீப் கிஷன் இந்த படத்தில் போராடுகிறார்” என்றார்.

Related Tags :
Next Story