துருவ நட்சத்திரம்


துருவ நட்சத்திரம்
x
தினத்தந்தி 7 July 2017 1:05 PM IST (Updated: 21 July 2017 12:39 PM IST)
t-max-icont-min-icon

‘துருவ நட்சத்திரம்’ படத்துக்காக 4 நாடுகளில் படமான பரபரப்பான சண்டை காட்சி விக்ரம் கதாநாயகனாக நடிக்க, கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்‌ஷனில் உருவாகி வரும் படம், ‘துருவ நட்சத்திரம்.’

 இந்த படத்தில் விக்ரமுடன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா ஆகியோர் ஏற்கனவே நடித்து வருகிறார்கள். தற்போது இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், திவ்யதர்ஷினி, வம்சி ஆகியோரும் இணைந்துள்ளனர்.
படத்தை பற்றி டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் மேலும் கூறியதாவது:-

“துருவ நட்சத்திரம் படத்துக்காக விக்ரமுடன் 12 சண்டை கலைஞர்கள் பங்கு பெற்ற பிரமாண்டமான சண்டை காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. சுலோவேனியா, பல்கேரியா, துருக்கி, அபுதாபி ஆகிய 4 நாடுகளில் இந்த சண்டை காட்சி படமானது. இது, தமிழ் சினிமாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி.

இதற்காக சண்டை காட்சி ஒருங்கிணைப்பாளர்களும், ஒளிப் பதிவாளர் மனோஜும் முன்னதாகவே அந்த 4 நாடுகளுக்கும் பயணித்து, படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்தார்கள். வேறு எந்த படப்பிடிப்பு குழுவினரும் படமாக்கியிராத இடங்களை தேடி அலைந்து படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.”

‘துருவ நட்சத்திரம்’ படத்தில் உளவுத்துறை அதிகாரியாக விக்ரம்

கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்டு செய்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில், உளவுத்துறை அதிகாரியாக விக்ரம் நடிக்கிறார்.

‘இருமுகன்’ படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் புதிய படம், இது. இதில், அவருக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். அதில் ஒருவர், ரீட்டு வர்மா. இன்னொருவர், ஐஸ்வர்யா ராஜேஷ். முக்கிய கதாபாத்திரங்களில் ராதிகா சரத்குமார், சிம்ரன், திவ்யதர்ஷினி, சதீஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை, ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பு அபுதாபி, பல் கேரியா, துருக்கி ஆகிய வெளிநாடுகளில் நடைபெறுகிறது. விக்ரம், ரீட்டு வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்த காட்சிகளும், வில்லன் கும்பலுடன் விக்ரம் மோதும் பயங்கர சண்டை காட்சிகளும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டன.

வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தில் விக்ரம் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார். 7 வருடங்களாக தலைமறைவாக இருந்த அவர், சர்வதேச குற்றவாளி ஒருவனை பிடிப்பதற்காக மீண்டும் பணியில் சேருவது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

1 More update

Next Story