மீசைய முறுக்கு


மீசைய முறுக்கு
x
தினத்தந்தி 18 July 2017 3:05 PM IST (Updated: 18 July 2017 3:05 PM IST)
t-max-icont-min-icon

டைரக்டர் சுந்தர் சி. தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘மீசைய முறுக்கு’ படம், தந்தை-மகன் ஆகிய இருவருக்கும் இடையிலான பாசப் போராட்டத்தை சொல்லும் கதை.

சுந்தர் சி. தயாரிப்பில் ‘மீசைய முறுக்கு’

 இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து, கதை-திரைக்கதை-வசனம்- பாடல்கள் எழுதி, இசையமைத்து, டைரக்டு செய்திருக்கிறார், ஹிப் ஹாப் தமிழா ஆதி. ‘மீசைய முறுக்கு’ படத்தை பற்றி இவர் கூறியதாவது:-

“குழந்தைகள் திறமைசாலியாக வளர வேண்டும் என்பதற்காகவே பிள்ளைகளை பல்வேறு துறைகளை கற்றுக்கொள்ள பல வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். அதன் அருமை அப்போதைக்கு பிள்ளைகளுக்கு தெரியாது. அவர்கள் வளர்ந்து ஆளாகி வாழ்க்கையில் சாதிக்கும்போதுதான் தந்தையின் நினைப்பு வரும். அப்பா மீது தனி மரியாதை வரும். அப்பாவை கதாநாயகனாக பார்ப்பார்கள். இதுதான் இந்த படத்தின் கரு.

இதில், கதாநாயகனாக ஆதியும், தந்தையாக விவேக்கும் நடித்துள்ளனர். கல்லூரி மாணவியாக ஆத்மிகா நடித்து இருக்கிறார். இவர்களுடன் மா.கா.பா.ஆனந்த், விஜயலட்சுமி, மாளவிகா, ஸாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர் சி. தயாரித்து இருக்கிறார்.

Next Story