சகுந்தலாவின் காதலன்


சகுந்தலாவின் காதலன்
x
தினத்தந்தி 18 July 2017 3:13 PM IST (Updated: 18 July 2017 3:13 PM IST)
t-max-icont-min-icon

‘காதலில் விழுந்தேன்’ டைரக்டரின் புதிய படம் ‘சகுந்தலாவின் காதலன்’

‘காதலில் விழுந்தேன்’ படத்தை டைரக்டு செய்த பி.வி.பிரசாத், அடுத்து ஒரு படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புகளுடன் கதாநாயகனாகவும் நடிக்கிறார். இந்த படத்துக்கு அவர், ‘சகுந்தலாவின் காதலன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். படத்தை பற்றி அவர் கூறுகிறார்:-

“காதலில் விழுந்தேன் படத்தில் நகுல் கதாபாத்திரம் எப்படி பேசப்பட்டதோ, அதேபோல் ‘சகுந்தலாவின் காதலன்’ படத்தில் ஹரி கிருஷ்ணன் என்ற என் கதாபாத்திரமும் பேசப்படும். ஒரே வீட்டில் காந்தியும், ஹிட்லரும் இருந்தால் எப்படி இருக்கும்? என்கிற கற்பனைக்கான திரை வடிவமே இந்த படம்.
காந்தி தன் பக்கம் ஹிட்லரை இழுக்க முயற்சிப்பதும், ஹிட்லர் தன் பக்கம் காந்தியை இழுக்க முயற்சிப்பதும்தான் கதை. 5 கோணங்களில், 5 சம்பவங்கள் மூலம் கதை சொல்லியிருக்கிறேன். சென்னை, ஐதராபாத், ராஜமுந்திரி, செங்கல்பட்டு, புதுச்சேரி ஆகிய இடங்களில் 110 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது.

கதாநாயகியாக பானு நடித்துள்ளார். கருணாஸ், சுமன், பசுபதி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜெகன், ராஜ்கபூர், மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். ஆ.வெண்ணிலா வசனம் எழுதியிருக்கிறார்.”
1 More update

Next Story