காதல் பிரதேசம்


காதல் பிரதேசம்
x
தினத்தந்தி 18 July 2017 3:20 PM IST (Updated: 18 July 2017 3:20 PM IST)
t-max-icont-min-icon

அந்த சின்ன கிராமத்தை சேர்ந்த ஒரு முதியவர் தனது மகனை ராணுவத்தில் சேர்க்க ஆசைப்படுகிறார்.

 ஆனால் அவருடைய மகனோ அதே ஊரை சேர்ந்த ஒரு நர்சை காதலிக்கிறான். இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு வந்ததால், இருவரும் ஊரை விட்டு ஓடுகிறார்கள். சில நாட்கள் கழித்து சொந்த கிராமத்துக்கு திரும்பி வந்த காதல் ஜோடி, மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

காதல் ஜோடி, பிரச்சினைகளை சமாளித்து தங்கள் காதலில் வெற்றி பெற்றார்களா? என்பதை சஸ்பென்ஸ்-திகிலுடன் சொல்லும் படத்துக்கு, ‘காதல் பிரதேசம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

புதுமுகங்கள் பிரசாத்-சயானாவுடன் எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.இந்திரன் இசையமைக்க, பின்னணி இசை அமைக்கிறார், சாஸ்தா. ஆர்.பாலசந்தர் தயாரிக்கிறார். கதை-திரைக்கதை-வசனம்-டைரக்‌ஷன்: எம்.வடிவேல். ஊட்டி, ஏலகிரி, சத்யமங்களம் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.
1 More update

Next Story