கட்டம்


கட்டம்
x
தினத்தந்தி 18 July 2017 3:43 PM IST (Updated: 18 July 2017 3:43 PM IST)
t-max-icont-min-icon

‘கட்டம்’ படத்தில் திகில் காட்சி பழைய கட்டிடத்துக்குள் மாட்டிக் கொள்ளும் 3 பேர் ஷிவதா நாயர் “தமிழ் பட உலகில் வித்தியாசமான முயற்சிகளுக்கு எப்போதுமே வரவேற்பு இருந்து வருகிறது.

 அந்த பட்டியலில் இடம் பெற இருக்கும் இன்னொரு படமாக, ‘கட்டம்’ அமையும்” என்கிறார், டைரக்டர் ராஜன் மாதவ். இவர், ஏற்கனவே ‘முரண்’ என்ற படத்தை இயக்கியவர். ‘கட்டம்’ படத்தை பற்றி அவர் மேலும் கூறுகிறார்:-

“இது, ஒரு புதுவகையான ‘கிரைம் திரில்லர்’ படம். வினை விதைத்தவன் அந்த வினையை அறுப்பான் என்று கூறுவார்கள். அந்த வினைக்கு துணை நின்றவனும் வினை அறுப்பான் என்ற கருத்தை ‘கட்டம்’ படத்தில் சொல்லியிருக்கிறோம். ஒரு பாழடைந்த பழைய கட்டிடத்துக்குள் மாட்டிக் கொள்ளும் 3 பேர் என்ன ஆகிறார்கள்? என்பதே கதை.

இதில், புதுமுகங்கள் நந்தன், நிவாஸ், ‘நெடுஞ்சாலை’ புகழ் ஷிவதா நாயர் ஆகிய மூன்று பேரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். டைரக்டர் மிஷ்கின் மற்றும் நடிகர் பிரசன்னா ஆகிய இருவரும் சிறு கதாபாத்திரங்களில் தோன்றுவார்கள். நவீன்-ஜே.பி.பால் ஆகிய இருவரும் இசையமைத்துள்ளனர். சந்தியாஜனா தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு சென்னை, தேனி ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினராலும் பேசப்படும்.”
1 More update

Next Story