100 சதவீதம் காதல்
ஜீ.வி.பிரகாஷ்குமார்- லாவண்யா திரிபாதியுடன் 100 சதவீதம் காதல்
நாக சைதன்யா-தமன்னா நடித்து, ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘100 சதவீதம் லவ்’ என்ற தெலுங்கு படம், தமிழில் தயாராகிறது. இந்த படத்துக்கு, ‘100 சத வீதம் காதல்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. தெலுங்கு படத்தை இயக்கிய சுகுமார் மற்றும் புவனா சந்திரமவுலி ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தை தமிழில் தயாரிக்கிறார்கள். எம்.எம்.சந்திரமவுலி டைரக்டு செய்கிறார். இவர், ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் உதவியாளராக பணியாற்றியவர். ‘100 சதவீதம் காதல்’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகம் ஆகிறார்.
ஜீ.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிப்பதுடன் இசையையும் அமைக்க, லாவண்யா திரிபாதி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சூரி, நாசர், யோகிபாபு, மனோபாலா, தம்பிராமய்யா, லிவிங்ஸ்டன், அம்பிகா, கீதா ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘சென்னை எக்ஸ்பிரஸ்,’ ‘தில்வாலே ஆகிய இந்தி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த டட்லி, இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். சவரிமுத்து, ஆண்டனி பாக்யராஜ் ஆகிய இருவரும் வசனம் எழுதியிருக்கிறார்கள்.
லண்டன் பின்னணியில் உருவாகும் இளமை ததும்பும் காதல் படம், இது. கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் இடையே நடக்கும் காதல் சண்டையே கதை. படப்பிடிப்பு லண்டனில், 60 நாட்கள் நடைபெற இருக்கிறது.

Related Tags :
Next Story