எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா


எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா
x
தினத்தந்தி 21 July 2017 12:37 PM IST (Updated: 21 July 2017 12:37 PM IST)
t-max-icont-min-icon

காதல்-நகைச்சுவை படம் ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’

‘கல்லூரி’ படத்தில் அறிமுகமான அகில், ‘சதுரங்க வேட்டை’ புகழ் இஷாரா நாயர் ஆகிய இருவரும் காதல் ஜோடியாக நடிக்க, ‘எங்கட இருந்தீங்க இவ்வளவு நாளா’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது. கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், கெவின். படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-

“தினமும் சென்னைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் பிழைப்பு தேடி வருகிறார்கள். அவர்களில் பாதி பேர் சினிமா கனவுகளை சுமந்து கொண்டு வருகிறார்கள். அப்படி வருபவர்களில் ஒருவர், அகில். சினிமா வாய்ப்பு தேடி, அது கிடைக்காததால் வெறுத்துப் போய் சொந்த ஊருக்கே திரும்புகிறார், அவர்.

ஊர் பண்ணையாராக இருக்கும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், அகிலின் கதையை கேட்டு, “நான் உன்னை வைத்து படம் தயாரிக்கிறேன்” என்று ஆறுதல் கூறுகிறார். அதோடு நிற்காமல் பட தயாரிப்பிலும் ஈடுபடுகிறார். இருவரும் சினிமாவில் ஜெயித்தார்களா? என்பதே கதை.
காதலும், நகைச்சுவையும் கலந்த இந்த படத்துக்கு சு.வர்ஷன் இசையமைக்கிறார். திருமுருகன், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

சென்னை, மாயவரம், கும்பகோணம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.”

Next Story