விஷ்ணு விஷால் தயாரிப்பாளராக மாறியது ஏன்?


விஷ்ணு விஷால் தயாரிப்பாளராக மாறியது ஏன்?
x
தினத்தந்தி 16 Aug 2017 12:37 PM IST (Updated: 16 Aug 2017 12:37 PM IST)
t-max-icont-min-icon

விஷ்ணு விஷால் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம், ‘கதா நாயகன்.’ இதில் கதாநாயகியாக கேத்தரின் தெரசா நடித்துள்ளார்.

சூரி, ஆனந்தராஜ், அருள்தாஸ், மனோபாலா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். த. முருகானந்தம் டைரக்டு செய்துள்ளார். படத்தை பற்றி விஷ்ணு விஷால் கூறியதாவது:-

“கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்த நான், ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் கதாநாயகன் ஆனேன். அதன் பிறகு நான் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தன. ‘குள்ள நரி கூட்டம்’ சிறப்பான படமாக வந்தது. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தை முதன் முதலாக தயாரித்து நடித்தேன். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடியது.

தற்போது, ‘கதாநாயகன்’ படத்தையும் தயாரித்து நடித்து இருக்கிறேன். இந்த படம் எனது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும். காதல், குடும்ப உறவு, நகைச்சுவை உள்பட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வணிக படமாக தயாராகி உள்ளது. அடுத்து, ‘சிலுக்கவார்பட்டி சிங்கம்,’ ‘ராட்சஸன்,’ ‘பொன் ஒன்று கண்டேன்,’ ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களில் நடிக்கிறேன். 2 படங்களை தயாரிக்கவும் செய்கிறேன். ‘முண்டாசு பட்டி,’ ‘நேற்று இன்று நாளை’ படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது.”
1 More update

Next Story