உன்னால் என்னால்


உன்னால் என்னால்
x
தினத்தந்தி 16 Aug 2017 12:41 PM IST (Updated: 16 Aug 2017 12:41 PM IST)
t-max-icont-min-icon

கிராமத்தில் இருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வரும் 3 இளைஞர்கள் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா, ஜெகா, உமேஷ்.

3 கதாநாயகர்களுடன் ‘உன்னால் என்னால்’

மூன்று பேரும் பணத்துக்காக எதையும் செய்யும் ஒரு பயங்கரவாத கும்பலிடம் சேர்கிறார்கள். ஒரு கட்டத்தில், அந்த கும்பலின் சுயரூபம் தெரியவருகிறது.

அவர்களிடம் இருந்து அந்த இளைஞர்கள் தப்பினார்களா, இல்லையா? என்பதை கருவாக வைத்து, ‘உன்னால் என்னால்’ என்ற படம் தயாராகி வருகிறது.

கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகிய மூவரும் நடிக்க, ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லை சிவா ஆகியோருடன் சோனியா அகர்வாலும் நடிக்கிறார். கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்ய, முகமது ரிஸ்வான் இசையமைத்து இருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா டைரக்டு செய்கிறார். தயாரிப்பு: சுப்பையா. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது.
1 More update

Next Story