மாயவன்


மாயவன்
x
தினத்தந்தி 16 Aug 2017 1:58 PM IST (Updated: 16 Aug 2017 1:58 PM IST)
t-max-icont-min-icon

அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், 144, சரபம் உள்பட பல படங்களை தயாரித்தவர், சி.வி.குமார். இவர், ‘மாயவன்’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார். படத்தை பற்றி அவர் கூறுகிறார்:-

சி.வி.குமாரின், ‘மாயவன்’ திகில் கலந்த மர்ம படம்

“மாயவன் திகில் கலந்த மர்ம படம். இதில், ‘மாநகரம்’ படத்தின் கதாநாயகன் சந்தீப் கிஷன் மிடுக்கான போலீஸ் வேடம் ஏற்றுள்ளார். வழக்கமான போலீஸ் கதையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படம், இது. ‘மாயவன்,’ புதுமையான-கற்பனைக்கு எட்டாத திகில் படமாக இருக்கும். கதாநாயகியாக லாவண்யா திரிபாதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.

படத்தில் டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப் உள்பட 5 வில்லன்கள் இருக்கிறார்கள். டைரக்டர் நலன் குமாரசாமி திரைக்கதை அமைத்துள்ளார்.

ஜிப்ரானின் மிரட்டலான பின்னணி இசை படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளது. கிராபிக்ஸ் காட்சிகள் மிக தத்ரூபமாக அமைந்து இருக்கிறது. கோபி அமர்நாத்தின் கேமரா மிக இயல்பாக காட்சிகளை படம்பிடித்துள்ளது.
படம் பார்க்கும் ஒவ்வொருவரும் ஒரு கேள்வி எழுப்பும் வகையில், படத்தின் இறுதி காட்சி அமைக்கப்பட்டுள்ளது. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.”
1 More update

Next Story