டார்ச் லைட்


டார்ச் லைட்
x
தினத்தந்தி 16 Aug 2017 2:37 PM IST (Updated: 16 Aug 2017 2:37 PM IST)
t-max-icont-min-icon

‘டார்ச் லைட்’ பட கதையை கேட்டு கண்ணீர் விட்டார், கதாநாயகி சதா! ஜெயம், அந்நியன் உள்பட பல வெற்றி படங்களில் நடித்த சதா,

சில வருட இடைவெளிக்குப்பின் மீண்டும் கதாநாயகியாக நடிக்கும் படம், ‘டார்ச் லைட்.’ இதில் சதா பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார். விஜய்யை வைத்து, ‘தமிழன்’ படத்தை இயக்கிய அப்துல் மஜீத், இந்த படத்தை டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி அவர் சொல்கிறார்:-

“பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், ‘டார்ச் லைட்’ படம் உருவாகி வருகிறது. வறுமையை பயன்படுத்தி பெண்ணினத்தை இந்த சமூகம் எப்படி படுகுழியில் தள்ளி, அவர்களின் வாழ்க்கையை பாழாக்குகிறது? என்பதே படத்தின் கரு. நான் பல நடிகைகளிடம் இந்த படத்தின் கதையை சொன்னேன். 40 நடிகைகளிடம் சொல்லியிருப்பேன். பாலியல் தொழிலாளியாக நடிக்க அவர்கள் மறுத்து விட்டனர்.

கடைசியில், சதாவிடம் சொன்னேன். கதையை கேட்டு அவர் கண்ணீர் விட்டார். வீடியோ பதிவுகளை பார்த்து விட்டு கலங்கினார். கண்களை துடைத்துக் கொண்டே “நான் இந்த படத்தில் நடிக்கிறேன்” என்றார். கதை நாயகியாக அவர் நடிக்கிறார். அவருடன் ரித்விகா, புது முகம் உதயா, டைரக்டர் ஏ.வெங்கடேஷ், சுஜாதா, ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுத, ஜேவி இசையமைக்கிறார்.

இந்த கதையை எந்த தயாரிப்பாளரும் தயாரிக்க முன்வராததால், எம்.அந்தோணி எட்வர்ட், ரங்கநாதன் ராஜு, கண்ணன் ஆகிய நண்பர்களுடன் இணைந்து நானே படத்தை தயாரிக்கிறேன். 1990-களில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, குற்றாலம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.”
1 More update

Next Story