நான் ஆணையிட்டால்

‘ராணா’ படத்தில் கூவத்தூர் காட்சி ராணா கதாநாயகனாக நடித்துள்ள ‘நேனே ராஜு நேனே மந்திரி’ என்ற தெலுங்கு படம் தமிழில், ‘நான் ஆணையிட்டால்’ என்ற பெயரில் வெளியாகிறது.
இதில், கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். நாசர், மயில்சாமி, ஜெகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை தேஜா இயக்கியிருக்கிறார். ‘நான் ஆணையிட்டால்’ படம் பற்றி ராணா சொல் கிறார்:-
“மனைவியுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் அவன் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பது கதை. இதில் நானும், காஜல் அகர்வாலும் கணவன்-மனைவியாக நடித்துள்ளோம். முழு நீள அரசியல் படமாக தயாராகி உள்ளது. காதல், குடும்ப பாசம், அதிரடி சண்டைகள் மற்றும் திகில் காட்சிகளும் இருக்கும். எம்.எல்.ஏக்களை கொண்டு போய் ‘ரிசார்ட்’டில் அடைத்து வைத்தால், நானும் சி.எம்.தான் என்ற வசனம் படத்தில் இடம்பெற்று இருப்பது, தற்போதையை தமிழக அரசியலை பிரதிபலிப்பதாக உள்ளது.
கூவத்தூர் சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே இந்த காட்சிகளை படமாக்கி விட்டோம். ஓட்டு போட்ட மக்களால் அரசியல்வாதிகளை என்ன செய்ய முடியும்? என்ற கேள்விக்கு பதில், இந்த படத்தில் இருக்கும். இதில் வேட்டி அணிந்து நடித்து இருக்கிறேன். எம்.ஜி.ஆர் படத்தில் இடம்பெற்ற பாடலில் இருந்து, ‘நான் ஆணையிட்டால்’ என்ற தலைப்பை தேர்வு செய்து இருக்கிறோம். இந்த தலைப்பு படத்துக்கு பொருத்தமாக இருக்கிறது.
எம்.ஜி.ஆர் பாடிய “பச்சைக்கிளி முத்துச்சரம்” பாடலும் படத்தில் இடம்பெறுகிறது. நல்ல கதைகள் அமைந்தால், நேரடி தமிழ் படத்தில் நடிப்பேன்” என்கிறார், ராணா.

Related Tags :
Next Story