யார் இவன்?


யார் இவன்?
x
தினத்தந்தி 12 Sept 2017 12:52 PM IST (Updated: 12 Sept 2017 1:11 PM IST)
t-max-icont-min-icon

கபடி விளையாட்டை கருவாக கொண்டு, ‘யார் இவன்?’ என்ற பெயரில், ஒரு படம் தயாராகி இருக்கிறது.

கதாநாயகனாக சச்சின், கதாநாயகியாக இஷா குப்தா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். பிரபு, கிஷோர், சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.

எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். டி.சத்யா டைரக்டு செய்ய, ரைனா ஜோஷி தயாரித்து இருக்கிறார். சென்னை, ஐதராபாத், கோவா, போலந்து ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. போலந்து நாட்டில் 2 பாடல்களும், ஐதராபாத்தில் ஒரு பாடலும், கோவாவில் ஒரு பாடலும் படமாக்கப்பட்டு இருக்கிறது. படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

 வைகிங் மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம்‘ யார் இவன்’. இதில், சச்சின் நாயகனாகவும், இஷாகுப்தா நாயகியாகவும் நடிக்கிறார்கள். பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் சதீஷ், கிஷோர், டெல்லி கணேஷ், சுப்ரீத், ஹர்‌ஷவர்தன், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இசை-எஸ்.எஸ்.தமன், பாடல்கள்- நா.முத்துக்குமார், ஒளிப்பதிவு- பீனேந்திரமேனன், படத்தொகுப்பு- பிரவீன்பூடி, கலை- ரகு குல்கர்ணி, ஸ்டண்ட்- கனல்கண்ணன், நடனம்- பாஸ்கோ சீசர்- ஜானி, தயாரிப்பு- ரைனா ஜோஷி, கதை, திரைக்கதை, இயக்கம்- டி.சத்யா, இவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘பட கோட்டி’, சிவாஜி கணேசன் நடித்த ‘உத்தம புத்திரன்’ உள்பட பல படங்களை இயக்கிய பழம் பெரும் இயக்குனர் டி.பிரகாஷ்ராவ் பேரன். தெலுங்கில் வெற்றிப் படங்களை இயக்கிய இவர் முதல் முறையாக இயக்கும் தமிழ் படம் ‘யார் இவன்’.
1 More update

Next Story