திட்டி வாசல்


திட்டி வாசல்
x
தினத்தந்தி 30 Sept 2017 3:08 AM IST (Updated: 30 Sept 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

எம். பிரதாப் முரளி இயக்கத்தில் சிறை பின்னணியில் உருவாகியிருக்கும் 'திட்டி வாசல்'

இது மலைவாழ் மக்களின் பிரச்சினைகள், போராட்டங்கள் பற்றியும் அவர்களின் வாழ்வியல் பற்றியும் பேசுகிற ஒரு படமாக உருவாகியுள்ளது. திட்டிவாசல் என்றால் சிறையில் இருக்கும் சிறிய கதவுடைய வழியைக் குறிப்பதாகும்.

"போலீஸ் ஸ்டேஷனில் போடப்படும் எப்.ஐ.ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கையைப் பொறுத்தே வழக்கின் தன்மை இருக்கும். ஆனால் அதிலுள்ள உண்மை நிலை தெரிவதற்குள் பல்வேறு சம்பவங்கள் நடக்கும். அந்தப் பாதிப்புகள் பற்றிய கதைதான் திட்டிவாசல் படம்.

படத்தில் நாசர் முக்கியபாத்திரம் ஏற்றுள்ளார். முன்னணி கதை மாந்தர்களாக மகேந்திரன், கன்னட நடிகர் சின்னிவினோத் வருகிறார்கள். தனு ஷெட்டி, ஐஸ்வர்யா, அஜய்ரத்னம், தீரஜ் அஜய்ரத்னம், ஸ்ரீதர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - ஜி.ஸ்ரீனிவாசன். ஹரீஷ், சத்தீஷ் ஜெர்மன் விஜய் என மூவர் இசையமைத்துள்ளனர். பாடல்கள் - நா.முத்துக்குமார், சதீஷ், சிவமுருகன்.
1 More update

Next Story