அறம்


அறம்
x
தினத்தந்தி 9 Nov 2017 4:02 PM IST (Updated: 9 Nov 2017 4:02 PM IST)
t-max-icont-min-icon

நயன்தாரா நடித்த ‘அறம்’ சமுதாய பிரச்சினையை அழுத்தமாக சொல்லும் படத்தின் முன்னோட்டம் பார்க்கலாம்.

“சமுதாய பிரச்சினைகளை பற்றி பேசும் படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த காலகட்டத்தில், ஒரு சமுதாய பிரச்சினையை அழுத்தமாகவும், அழகாகவும் கூறியுள்ள படம்தான், அறம்” என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் கோபி நைனார். இந்த படத்தை கொட்டப்படி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார். நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

படத்தை பற்றி தயாரிப்பாளர் ரவீந்திரன் கூறும்போது, “இந்த வருடத்தின் முக்கியமான படங்களில் ஒன்றாக ‘அறம்’ இருக்கும். அவ்வளவு வலுவான கதையம்சம் கொண்ட படம், இது. டைரக்டர் கோபி நைனார், இந்த கதையை அருமையாக கையாண்டிருக்கிறார். ஒரு நேர்மையான கலெக்டராக நயன்தாரா வாழ்ந்திருக்கிறார். ஓம் பிரகாசின் ஒளிப்பதிவில், படம் உருவாகியிருக்கிறது. ஜிப்ரான் இசையமைத்துள்ளார்” என்றார்.
1 More update

Next Story