மெர்லின்


மெர்லின்
x
தினத்தந்தி 24 Feb 2018 9:08 PM GMT (Updated: 24 Feb 2018 9:08 PM GMT)

‘பச்சை என்கிற காத்து’ படத்தை இயக்கிய இயக்குனர் கீரா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியுள்ள படம் ‘மெர்லின்’ படத்தின் முன்னோட்டம்.

 ஜே.எஸ்.பி. பிலிம்ஸ் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு பிரியனும் கதாநாயகியாக ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள அஸ்வினியும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் தங்கர் பச்சான், மனோபாலா, மு.களஞ்சியம், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘லொள்ளு சபா’ ஜீவா, சிங்கம் புலி, ‘கயல்’ தேவராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். அட்டகத்தி தினேஷ் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் கீரா. கணேஷ், ராகவேந்திரா இசையும், முத்துக்குமரன் ஒளிப்பதிவும் திகில் கதைக்கு உதவி இருக்கின்ற  படம் ‘மெர்லின்’. 

Next Story