செம போத ஆகாதே

“போதையில் முடிவு எடுக்கக் கூடாது...அதுவும் செம போதையில் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. அப்படி ஒரு முடிவு எடுத்தால், அது நம்மை வாட்டி வதைத்து விடும். இந்த கருவை அடிப்படையாக வைத்தே ‘செம போத ஆகாதே’ படத்தை நகைச்சுவையாக உருவாக்கி இருக்கிறோம்”
படத்தின் டைரக்டர் பத்ரி வெங்கடேஷ். அவர் மேலும் கூறுகிறார்:- “பாணா காத்தாடி படத்தில் அதர்வாவையும், சமந்தாவையும் அறிமுகம் செய்தேன். அதன் பிறகு அதர்வாவுடன் மீண்டும் கூட்டு சேர்ந்து, ‘செம போத ஆகாதே’ படத்தை எடுத்து இருக்கிறேன். இந்த படத்தை அதர்வாவே தயாரித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக மிஸ்டி சக்ரவர்த்தி நடித்துள்ளார். இவர், பிரபல இந்தி டைரக்டர் சுபாஷ்கையினால் அறிமுகம் செய்யப்பட்டவர். அனைகா சோடி, விலை மாதுவாக நடித்து இருக்கிறார்.
மனோபாலா, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், தேவதர்சினி ஆகியோரும் நடித்துள்ளனர். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். சென்னை, மற்றும் கர்நாடகாவில் வளர்ந்த இந்த படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.”
“படம் தயாரிப்பது கஷ்டமான வேலை என்று பல தயாரிப்பாளர்கள் கூறுவதை கேட்டு இருக்கிறேன். அதை இந்த படத்தில் நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்” என்று படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான அதர்வா கூறினார்.

Related Tags :
Next Story