ஜூலை காற்றில்


ஜூலை காற்றில்
x
தினத்தந்தி 1 Aug 2018 11:11 PM IST (Updated: 1 Aug 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

2 கதாநாயகிகளுடன் ஒரு காதல் படம் ‘ஜூலை காற்றில்’ “நேரம், பிரேமம், அமரகாவியம், வெற்றிவேல் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனந்தநாக், இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

“இன்றைய இளைய தலைமுறை யினர் மத்தியில் காதல் பற்றிய பார்வையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் இளமையில் ஏற்படும் காதல் தொடர்பான உறவுகளுக்குள் பிரிவையும் எதிர்கொள்கிறார்கள். புதிய உறவையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். காதலர்கள் தங்களுக்குள் ஏற்படும் விரிசலையும், உரசலையும் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதை ‘ஜூலை காற்றில்’ படத்தில் சுவாரசியமாக சொல்லியிருக்கிறோம்...” என்கிறார், அந்த படத்தின் டைரக்டர் கே.சி.சுந்தரம். இவர், மறைந்த டைரக்டர் ஜீவாவின் உதவியாளர்.

‘ஜூலை காற்றில்’ படத்தை பற்றி அவர் மேலும் கூறுகிறார்:- “நேரம், பிரேமம், அமரகாவியம், வெற்றிவேல் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனந்தநாக், இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக அஞ்சுகுரியன், சம்யுக்தா மேனன் ஆகிய 2 பேரும் நடிக்கிறார்கள். ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைக்க, டிமேல் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சரவணன் பழனியப்பன் தயாரிக்கிறார். சென்னை, கோத்தகிரி, இலங்கை மற்றும் போர்ச்சுக்கல் நாட்டில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.”
1 More update

Next Story