கொரில்லா

ஜீவா-ஷாலினி பாண்டே ஜோடியுடன் சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். ராதாரவி, முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஜீவா-ஷாலினி பாண்டே ஜோடியாக நடித்து வரும் ‘கொரில்லா’ படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. இதில் ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்து இருக்கிறார், டான் சாண்டி. படத்தை பற்றி அவர் கூறியதாவது:-
“ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். இவர்களுக்கு பணத்தேவை ஏற்படுகிறது. அதற்காக ஒரு வங்கியை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள். இவர்கள் தங்களுடன் ஒரு குரங்கையும் சேர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் வங்கியை கொள்ளையடித்தார்களா, இல்லையா? என்பதே படத்தின் கதை.
மறைந்திருந்து எதிர்பாராமல் தாக்குவதற்குத்தான் ‘கொரில்லா தாக்குதல்’ என்பார்கள். அதேபோன்ற ஒரு தாக்குதல், படத்தில் இடம் பெற்றுள்ளது. படத்துக்கு ‘கொரில்லா’ என்று பெயர் வைத்ததற்கு இதுவே காரணம். மற்றபடி, கொரில்லாவுக்கும், சிம்பன்சி குரங்குக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இந்த கதை சென்னையில் நடைபெறுகிறது. சிம்பன்சி தொடர்பான காட்சிகளை தாய்லாந்துக்கு சென்று படமாக்கினோம். ‘கொரில்லா’ படத்தில் நடித்துள்ள குரங்கு ஏராளமான ஹாலிவுட் படங்களிலும் நடித்து இருக்கிறது.”
Related Tags :
Next Story






