90 எம்.எல்


90 எம்.எல்
x
தினத்தந்தி 16 Aug 2018 10:32 PM IST (Updated: 16 Aug 2018 10:32 PM IST)
t-max-icont-min-icon

`களவாணி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஓவியா, `பிக் பாஸ்' என்ற டி.வி. நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து அவர், `90 எம்.எல்.' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள ஒரு படத்தில், கதை நாயகியாக நடிக்கிறார்.

சிலம்பரசன் இசையமைக்க ஓவியா நடித்த படம் `90 எம்.எல்'! அவருடன் பொம்மு லட்சுமி, மாசும், ஸ்ரீகோபிகா, மோனிஷா ஆகிய 4 புதுமுக நடிகைகளும் நடிக்கிறார்கள். பிரதீப், அருண் என்ற 2 கல்லூரி மாணவர்கள், நகைச்சுவை நடிகர்களாக அறிமுகம் ஆகிறார்கள்.

பாடல்களை நடிகர் சிவா எழுத, சிலம்பரசன் இசையமைக்கிறார். சந்தானம் நடித்த `சக்கப்போடு போடு ராஜா' படத்துக்குப்பின், சிலம்பரசன் இசையமைக்கும் படம், இது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், அனிதா உதீப். இவர் ஏற்கனவே `குளிர் 100 டிகிரி' என்ற படத்தை டைரக்டு செய்தவர்.

`90 எம்.எல்.' படத்தை பற்றி டைரக்டர் அனிதா உதீப் சொல்கிறார்:-
``கதை நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம், இது. இதுவரை சொல்லப்படாத ஒரு கருத்தை மையப்படுத்தி இருக்கிறேன். பெண்கள் தங்கள் வாழ்க்கையில், நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை பதிவு செய்து இருக்கிறேன்.

கதை நாயகியின் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்ததால், ஓவியாவை தேர்வு செய்தோம். படத்தின் கதையை சிலம்பரசனிடம் சொன்னோம். அவருக்கு பிடித்து இருந்ததால் இசையமைக்க சம்மதித்தார். அதோடு 2 பாடல்களையும் பாடியிருக்கிறார்.''

1 More update

Next Story