எம்.ஜி.ஆர்.


எம்.ஜி.ஆர்.
x
தினத்தந்தி 31 Aug 2018 10:33 PM IST (Updated: 31 Aug 2018 10:33 PM IST)
t-max-icont-min-icon

ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது, ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை, ‘எம்.ஜி.ஆர்.’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து வருகிறது.

எம்.ஜி.ஆர். படத்துக்கு 5 இசையமைப்பாளர்கள், பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை ‘காமராஜ்‘ என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது, ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை, ‘எம்.ஜி.ஆர்.’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து வருகிறது. படத்தை தயாரித்து டைரக்டு செய்யும் அ.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

‘‘இந்த படத்தில், எம்.ஜி.ஆரை போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பர பட நாயகன் சதீஷ்குமார், எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கிறார். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளாக ரித்விகாவும், எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்துலுவாக ஒய்.ஜி.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்ரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி ஆகியோர் நடிக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். தனது திரைப்படங்களில் கதைக்கும், தனது கதாபாத்திரத்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை போன்றே படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். அதனால்தான் அவரது பாடல்கள் இன்றும் சாகாவரம் பெற்று மக்களின் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அதேபோல் இந்த படத்தில் இடம் பெறும் பாடல்களும் இருக்க வேண்டும் என்பதால் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு பாடல்கள் எழுதிய கவிஞர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் பூவை செங்குட்டுவன் ஆகியோர் பாடல்களை எழுதி இருக்கிறார்கள். 5 இசையமைப்பாளர்கள் இசையமைக்கிறார்கள். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

படப்பிடிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். படத்தின் டிரைலரை சைதை துரைசாமி வெளியிடுகிறார்.

1 More update

Next Story