வட சென்னை


வட சென்னை
x
தினத்தந்தி 31 Aug 2018 11:01 PM IST (Updated: 31 Aug 2018 11:01 PM IST)
t-max-icont-min-icon

‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தை அடுத்து தனுஷ் நடித்து வெளிவர இருக்கும் படம், ‘வட சென்னை.’ இந்த படத்தை வெற்றிமாறன் டைரக்டு செய்து இருக்கிறார்.

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் ‘வட சென்னை’ படத்தில் நட்சத்திர கூட்டம்

‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தை அடுத்து தனுஷ் நடித்து வெளிவர இருக்கும் படம், ‘வட சென்னை.’ இந்த படத்தை வெற்றிமாறன் டைரக்டு செய்து இருக்கிறார். ‘விசாரணை’ படத்துக்குப்பின், இவருடைய டைரக்‌ஷனில் வெளிவரும் படம், இது. ‘பொல்லாதவன்,’ ‘ஆடுகளம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இருவரும் இந்த படத்தில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள்.

‘வட சென்னை’ படத்தில் தனுஷ், ‘அன்பு’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவன், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பெரும் நட்சத்திர கூட்டம் படத்தில் இடம் பெற்றுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். தனுசின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. படத்தை லைக்கா புரொடக்‌ஷன் நிறுவனம் வெளியிடுகிறது. படம், அக்டோபர் வெளியீடாக திரைக்கு வருகிறது.
1 More update

Next Story