குருதி ஆட்டம்

ஸ்ரீகணேஷ் டைரக்டு செய்யும் ‘குருதி ஆட்டம்’ படத்தில், அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஒரு படத்தின் வெற்றி நடிகர்கள் தேர்விலேயே பாதி நிர்ணயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். இதை ‘எட்டு தோட்டாக்கள்’ படத்தில், டைரக்டர் ஸ்ரீகணேஷ் நிரூபித்து இருந்தார். அடுத்து இவர் டைரக்டு செய்யும் ‘குருதி ஆட்டம்’ படத்தில், அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
படத்தை பற்றி டைரக்டர் ஸ்ரீகணேஷ் கூறி யதாவது:-
‘‘இந்த படத்தில் ராதாரவியும், ராதிகா சரத்குமாரும் நடிப்பது, மிகப்பெரிய கவன ஈர்ப்பாக அமையும். என் கதையை இவர்கள் கேட் பார்களா? என்ற சந்தே கம் எனக் குள் இருந்தது. அந்த 2 கதாபாத்திரங்களையும் நான் அமைத்திருந்த விதம் அவர்களை கவர்ந்தது. அதனால் முழு மனதோடு நடிக்க சம்மதித்தார்கள். இதேபோல், கதாநாயகியும் ஒரு அழுத்தமான கதாபாத்திரமாக உருவாக்கப் பட்டுள்ளது.
மதுரை பின்னணியில் உள்ள தாதாக்களை பற்றிய கதை, இது. டி.முருகானந்தம், ஐ.பி.கார்த்திகேயன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.
Related Tags :
Next Story






