சூப்பர் டீலக்ஸ்


சூப்பர் டீலக்ஸ்
x
தினத்தந்தி 23 Oct 2018 10:45 PM IST (Updated: 23 Oct 2018 10:45 PM IST)
t-max-icont-min-icon

விஜய் சேதுபதி நடித்துள்ள புதிய படம், ‘சூப்பர் டீலக்ஸ்.’ இந்த படத்தை தியாகராஜன் குமாரராஜா டைரக்டு செய்திருக்கிறார். இவர், ‘ஆரண்ய காண்டம்’ படத்தை டைரக்டு செய்தவர்.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை ஷில்பாவாக விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி நடித்துள்ள புதிய படம், ‘சூப்பர் டீலக்ஸ்.’ இந்த படத்தை தியாகராஜன் குமாரராஜா டைரக்டு செய்திருக்கிறார். இவர், ‘ஆரண்ய காண்டம்’ படத்தை டைரக்டு செய்தவர். ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் பற்றி அவர் சொல்கிறார்:-

“இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் சில மணிநேரத்துக்குள் அவர்களின் வேலையை செய்து முடிக்கும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு கதாபாத்திரத்துக்கும், இன்னொரு கதாபாத்திரத்துக்கும் என்ன தொடர்பு, ஒருவரால் இன்னொருவருக்கு என்ன பாதிப்புகள் வருகிறது என்பது கதை. விஜய் சேதுபதி, ‘ஷில்பா’ என்ற திருநங்கை வேடத்திலும், சமந்தா வேம்பு என்ற கதாபாத்திரத்திலும் வருகிறார்கள்.

விஜய் சேதுபதி எந்த வேடத்தையும் செய்யும் திறமையில் இருக்கிறார். திருநங்கை கதாபாத்திரமும் அவருக்கு பொருந்தி இருக்கிறது. படத்தில் பஹத்பாசில், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் உள்ளனர். மிஸ்கின், நலன் குமாரசாமி, நீலன் கே. சேகர் ஆகிய மூன்று இயக்குனர்களும் கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். அவர்கள் பார்வையில் வெவ்வேறுவிதமாக எழுதி தந்த திரைக்கதைகளை ஆய்வு செய்து புதிதாக வடிவமைத்து இருக்கிறேன். கதைக்கு சிறப்பான பங்களிப்பை அவர்கள் கொடுத்து உள்ளனர்.

18வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான படமாகவே இதை உருவாக்கி உள்ளேன். திகில், நகைச்சுவை விஷயங்களும், சில சமூக பிரச்சினைகளும் படத்தில் இருக்கும். பி.எஸ்.வினோத், நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
1 More update

Next Story