இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு


இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
x
தினத்தந்தி 10 Nov 2018 11:13 AM IST (Updated: 10 Nov 2018 11:13 AM IST)
t-max-icont-min-icon

விமல் கதாநாயகனாக நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்ற படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், சிங்கம்புலி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

விமல் நடிக்கும் புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக பூர்ணா!

கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்காமல், மாறுபட்ட குணச்சித்ர வேடங்களில் நடித்து பெயர் வாங்கினால் போதும் என்று முடிவு செய்துள்ள நடிகைகளில், பூர்ணாவும் ஒருவர். இவர், முத்தையா இயக்கிய ‘கொடிவீரன்' படத்திற்காக தலைமுடியை தியாகம் செய்து மொட்டை போட்டுக் கொண்டார்.

அடுத்து இவர், விமல் கதாநாயகனாக நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்ற படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், சிங்கம்புலி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

விவேகா பாடல்களை எழுத, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், ஏ.ஆர்.முகேஷ். சார்மிளா மாண்ரே, ஆர்.சர்வண் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். படத்தை பற்றி டைரக்டர் ஏ.ஆர்.முகேஷ் கூறியதாவது:-

‘‘இது, கவர்ச்சிக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து தயாராகும் படம். படப்பிடிப்பு லண்டனில், 20 நாட்கள் நடை பெற்றது. சென்னையிலும், தென்காசியிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படத்தின் டீசரை 6 நாட்களில், 20 லட்சம் பேர் பார்த்து இருக்கிறார்கள். இளைஞர்களை கவரும் வகையில், படம் தயாராகி வருகிறது.’’
1 More update

Next Story