ஆர்.டி.ராஜாவின் 4-வது படம் மித்ரன் டைரக்‌ஷனில், சிவகார்த்திகேயன்


ஆர்.டி.ராஜாவின் 4-வது படம் மித்ரன் டைரக்‌ஷனில், சிவகார்த்திகேயன்
x
தினத்தந்தி 10 Nov 2018 12:12 PM IST (Updated: 10 Nov 2018 12:12 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.டி.ராஜாவின் 4-வது படம் மித்ரன் டைரக்‌ஷனில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை டைரக்டு செய்கிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ,’ ‘வேலைக்காரன்,’ ‘சீமராஜா’ ஆகிய படங்களை தயாரித்தவர், ஆர்.டி.ராஜா. இவர் அடுத்து பிரமாண்டமான முறையில் ஒரு புதிய படம் தயாரிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், பி.எஸ்.மித்ரன். இவர், ‘இரும்புத்திரை’ படத்தை டைரக்டு செய்தவர்.

அந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி களிலும் வெற்றி பெற்றதை அடுத்து, சிவகார்த்தி கேயன் நடிக்கும் புதிய படத்தை டைரக்டு செய்கிறார். படத்தின் கதாநாயகி மற்றும் சக நட்சத்திரங்கள் முடிவாகவில்லை. ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர்ராஜா இசையமைக் கிறார்.

இந்த படத்தில், அர்ஜுன் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பலம் பொருந்திய ஒரு வில்லனும் பங்கேற்கிறார். படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.

சிவகார்த்திகேயன் இப்போது ரவிகுமார் டைரக்‌ஷனில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில், அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். இஷா கோபிகர், கருணாகரன், யோகி பாபு ஆகிய மூன்று பேரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.
1 More update

Next Story