சர்வம் தாள மயம்


சர்வம் தாள மயம்
x
தினத்தந்தி 10 Nov 2018 1:10 PM IST (Updated: 10 Nov 2018 1:10 PM IST)
t-max-icont-min-icon

சில வருட இடைவெளிக்குப்பின், ராஜீவ் மேனன் ஒரு புதிய தமிழ் படத்தை டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்துக்கு அவர், `சர்வம் தாள மயம்' என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

ராஜீவ் மேனன் டைரக்‌ஷனில் `சர்வம் தாள மயம்' தமிழ் மற்றும் மலையாள பட உலகின் மிக சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ராஜீவ் மேனனும் ஒருவர். இவர், `மின்சார கனவு' படத்தின் மூலம் டைரக்டராக உயர்ந்தார். தொடர்ந்து, `கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' படத்தை டைரக்டு செய்தார். 2 படங்களும் வெற்றிகரமாக ஓடி, ராஜீவ் மேனனுக்கு பெயரையும், புகழையும் பெற்று கொடுத்தது.

சில வருட இடைவெளிக்குப்பின், ராஜீவ் மேனன் ஒரு புதிய தமிழ் படத்தை டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்துக்கு அவர், `சர்வம் தாள மயம்' என்று பெயர் சூட்டியிருக்கிறார். மிருதங்க கலைஞராக வர ஆசைப்படும் ஒரு இளைஞன், அதற்காக ஒரு மிருதங்க வித்வானிடம் மாணவராக சேர ஆசைப்படுகிறான். அவன் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் அவரிடம் இருந்தும், கர்நாடக இசை சமூகத்தில் இருந்தும் நிராகரிக்கப்படுகிறான்.

சாதி-மத பிரச்சினைகளை தாண்டி, இன்றைய காலகட்டத்தில் அவனுடைய ஆசை வென்றதா, இல்லையா? என்பதே படத்தின் கதை. இதில், ஜீ.வி.பிரகாஷ் கதைநாயகனாக நடித்து இருக்கிறார். அவருடன் நெடுமுடி வேணு, வினித், அபர்ணா பாலமுரளி, டி.டி. உள்பட பலர் நடித்துள்ளனர்.

காஷ்மீர், ஷில்லாங், ஜெய்ப்பூர், கேரளா ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. இந்த படம், ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடைபெறும் 31-வது சர்வதேச படவிழாவில் திரையிடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது.
1 More update

Next Story