மான்ஸ்டர்


மான்ஸ்டர்
x
தினத்தந்தி 10 Nov 2018 1:18 PM IST (Updated: 10 Nov 2018 1:18 PM IST)
t-max-icont-min-icon

திரைப்படங்களுக்கான வரிச்சலுகைகள் ரத்து செய்யப்பட்டபின், பல புதிய படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்படுகின்றன. அந்த வரிசையில் ஒரு புதிய படத்துக்கு, ‘மான்ஸ்டர்’ என்று ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

நெல்சன் வெங்கடேசன் டைரக்‌ஷனில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’
‘மாயா,’ ‘மாநகரம்’ போன்ற தரமான படங்களை தயாரித்த பொடென்ஷியல் ஸ்டூடியோஸ், இந்த படத்தை தயாரிக்கிறது.

இது, குழந்தைகளுக்கான திரைப்படம். இதில், எஸ்.ஜே.சூர்யா இதுவரை நடித்திராத ஒரு புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகி, ப்ரியா பவானி ஷங்கர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார். ‘ஒருநாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் டைரக்டு செய்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் இப்போது நடைபெறுகின்றன.
1 More update

Next Story