அடங்க மறு


அடங்க மறு
x
தினத்தந்தி 4 Dec 2018 10:36 PM IST (Updated: 4 Dec 2018 10:36 PM IST)
t-max-icont-min-icon

ஜெயம் ரவி - ராஷி கண்ணா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அடங்க மறு’. இந்த படத்தின் ஆல்பம் மற்றும் ப்ரோமோ காட்சிகள் பெரும் வெற்றியை பெற்று அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

இயக்குனர் கார்த்திக் தங்கவேலின் 'அடங்க மறு' படமும் அந்த வகையிலான ஒரு படம் தான். அதிரடியான சண்டைக்காட்சிகள், யதார்த்தமான அரங்க அமைப்பு மற்றும் மிகச்சிறந்த நடிகர்கள் மூலம் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் மூலம் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். ஆனந்த் ஜாய் இணை தயாரிப்பாளராக பணிபுரிய, சமீபத்திய சென்சேஷன் சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சம்பத்ராஜ், முனீஷ்காந்த், பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, பாபு ஆண்டனி, அழகம் பெருமாள், மீரா வாசுதேவன் மற்றும் பல பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
1 More update

Next Story