ஹவுஸ் ஓனர்


ஹவுஸ் ஓனர்
x
தினத்தந்தி 6 Dec 2018 11:56 PM IST (Updated: 6 Dec 2018 11:56 PM IST)
t-max-icont-min-icon

சென்னை வெள்ள பின்னணியில் நடக்கும் காதல் கதை படம் ‘ஹவுஸ் ஓனர்’ சினிமா முன்னோட்டம் பார்க்கலாம்.

ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய தரமான கதைகளை தேர்வு செய்து டைரக்டு செய்த லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது, ‘ஹவுஸ் ஓனர்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை பற்றி அவர் சொல்கிறார்:-

‘‘சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக இந்த படம் உருவாகி இருக்கிறது. என் எல்லா படங்களின் கதாபாத்திரங்களும் நிஜவாழ்க்கையில் இருந்து ஈர்க்கப்பட்டவைதான். ‘ஹவுஸ் ஓனர்’ படமும் விதிவிலக்கு அல்ல.

96, ராட்சசன், பரியேறும் பெருமாள், வட சென்னை என சிறந்த கதையம்சம் உள்ள படங்கள் வரிசையாக வெற்றி பெற்றது போல், எங்கள் படமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

‘ஹவுஸ் ஓனர்’ படத்தில், ‘ஆடுகளம்’ புகழ் கிஷோர் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின், கதாநாயகியாக அறி முகம் ஆகிறார். ஸ்ரீரஞ்சனி, ஒவ்வொரு வீட்டில் இருக்கும் அம்மாவை பிரதிபலிப்பார்.

ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இப்போது நடைபெறுகின்றன.’’
1 More update

Next Story