ரத்தின சிவா இயக்கும் புதிய படத்தில், ஜீவா


ரத்தின சிவா இயக்கும் புதிய படத்தில், ஜீவா
x
தினத்தந்தி 18 Dec 2018 12:22 AM IST (Updated: 18 Dec 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

‘றெக்க’ படத்தை இயக்கிய ரத்தின சிவா அடுத்து ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு அவர் இன்னும் பெயர் சூட்டவில்லை. ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

படத்தை பற்றி டைரக்டர் ரத்தின சிவா கூறுகிறார்:-
“ஜீவா மிக சிறந்த நடிகர். காதல், நகைச்சுவை, சண்டை என மூன்றையும் திறம்பட நேர்த்தியாக செய்பவர். இந்த படம் அவருடைய முழு திறமையையும் வெளிக்கொண்டு வரும் படமாக இருக்கும். நான் கதையை சொன்னதும் அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. “தற்போது நான் நடிக்கும் படங்கள் அனைத்தும் திகில் கதையம்சம் உள்ள படங்கள். இதற்கு மத்தியில் வர்த்தக ரீதியிலான ஒரு படம் அமைந்தால் நன்றாக இருக்குமே என்று எதிர்பார்த்தேன். அமைந்து விட்டது” என்றார்.

ஒரு கிராமத்தின் பின்னணியில், உண்மை சம்பவங்களை மையப்படுத்தி, கதையில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த படம் உருவாகிறது. படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.”
1 More update

Next Story