பார்த்த விழி பார்த்தபடி


பார்த்த விழி பார்த்தபடி
x
தினத்தந்தி 18 Dec 2018 12:48 AM IST (Updated: 18 Dec 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

பரதத்துக்கும், பாகவதத்துக்கும் பனிப்போர் படம் ‘பார்த்த விழி பார்த்தபடி’ சினிமா முன்னோட்டம்.

“சிறு வயது முதல் கர்நாடக சங்கீதத்தில் பாடி புலமை பெற்றவர், சந்தோஷ். வாலிப வயதில் உலகம் போற்றும் பாடகராக வலம் வருகிறார்.

அதேபோல் சிறு வயது முதல் பரத நாட்டியத்தில் ஈடுபாடு கொண்டவர், சாந்தி. பருவ வயதை அடைந்ததும் பரத நாட்டியத்தில் புகழ் பெற்று, இந்தியாவிலேயே பெரிய கலைஞராக பேசப்படுகிறார்.

இவர்கள் இருவருக்கும் மோதல் வருகிறது. அதன் விளைவாக நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பான திரைக்கதையாக்கி இருக்கிறோம்” என்கிறார், ‘பார்த்த விழி பார்த்தபடி’ என்ற படத்தின் டைரக்டர் சேது இயாள். இந்த படத்தின் திரைக்கதையை தேசிய விருது பெற்ற மாடம்பு குஞ்சு முட்டன் அமைத்து இருக்கிறார்.

சந்தோஷ், பிரணவ் சுரேஷ், சாந்தி கிருஷ்ணா, பிரசிதா உதய் ஆகியோருடன் ஒய்.ஜி.மகேந்திரன், அவருடைய மகள் மதுவந்தி ஆகிய இருவரும் வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளனர். தட்சிணாமூர்த்தி இசையில் ஜேசுதாஸ், அவரது மகன் விஜய் ஜேசுதாஸ், மகள் அமேயா ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

பரதத்துக்கும், பாகவதத்துக்கும் இடையே நடைபெறும் பனிப்போரை இந்த படத்தின் கதை சித்தரிக்கும். கே.விஜயலட்சுமி, லீனா ஆனந்த், என்.விஜயமுரளி ஆகிய மூவரும் தயாரித்து இருக்கிறார்கள்.
1 More update

Next Story