வெள்ளை பூக்கள்


வெள்ளை பூக்கள்
x
தினத்தந்தி 23 March 2019 9:49 PM IST (Updated: 23 March 2019 9:49 PM IST)
t-max-icont-min-icon

நகைச்சுவை நடிகர் விவேக், ‘வெள்ளை பூக்கள்’ என்ற புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விவேக் இளங்கோவன் டைரக்டு செய்கிறார்.

போலீஸ் அதிகாரியின் கதை படமாகிறது அமெரிக்க வாழ் தமிழர்களின் ‘வெள்ளை பூக்கள்’

நகைச்சுவை நடிகர் விவேக், ‘வெள்ளை பூக்கள்’ என்ற புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விவேக் இளங்கோவன் டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

‘‘இது, ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் கதை. தமிழ்நாட்டில் உயர் போலீஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர், ருத்ரன். இவர், அமெரிக்காவில் வசிக்கும் மகனையும், மருமகளையும் பார்ப்பதற்காக அங்கே செல்கிறார். அங்கு அவர் பல்வேறு குணாதிசயங்களை கொண்ட மனிதர்களை சந்திக்கிறார். அவர்கள் ஒவ்வொருவரும் திடீர் திடீர் என கொலை செய்யப்படுகிறார்கள்.

ருத்ரன் தனது போலீஸ் மூளையை பயன்படுத்தி விசாரணையை தொடங்குகிறார். கொலையாளி யார், கொலைகளுக்கான காரணம் என்ன? என்பதை அவர் கண்டுபிடிக்கிறாரா, இல்லையா? என்பதே திரைக்கதை. அமெரிக்க வாழ் தமிழர்கள் திகா சேகரன், வருண் குமார், அஜய் சம்பத் ஆகிய மூன்று பேரும் தயாரிக்கிறார்கள்.

விவேக்குடன் சார்லி, பூஜா தேவரியா, தேவ், ஹாலிவுட் நாயகி பெய்ஜ் ஹென்டர்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். டிரைடன்ட் ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம், படத்தை வெளியிடுகிறது.’’
1 More update

Next Story