முன்னோட்டம்
குடிமகன்

குடிமகன்
கலைஞானத்தின் பேரன் ஜெய்குமார் ஈரநிலம் புகழ் ஜெனிபர் சத்தீஷ்வரன் எஸ்.எம். பிரசாந்த் சி.டி. அருள்செல்வன்
குடிப்பவர்கள் நிம்மதியாக தூங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத்தான் தூக்கம் போய் விடுகிறது என்ற கருத்தை அடிப்படையாக வைத்து, ‘குடிமகன்’ என்ற படம் தயாராகி இருக்கிறது.
Chennai
ஒரு அழகான கிராமமும் மதுபான கடையும்...

குடிப்பவர்கள் நிம்மதியாக தூங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத்தான் தூக்கம் போய் விடுகிறது என்ற கருத்தை அடிப்படையாக வைத்து, ‘குடிமகன்’ என்ற படம் தயாராகி இருக்கிறது. கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்திருப்பதுடன் படத்தை தயாரித்தும் இருக்கிறார், சத்தீஷ்வரன்.

பிரபல கதாசிரியரும், தயாரிப்பாளருமான கலைஞானத்தின் பேரன் ஜெய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ‘ஈரநிலம்’ புகழ் ஜெனிபர் நடிக்கிறார். மாஸ் டர் ஆகாஷ், வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, பாலாசிங், கிரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இசை எஸ்.எம். பிரசாந்த், ஒளிப்பதிவு சி.டி. அருள்செல்வன். 

விமர்சனம்

பெண்கள் கால்பந்து விளையாட்டு பின்னணியில் வந்துள்ள அதிரடி படம் 'பிகில்'

மக்களுக்கு நன்மை செய்யும் தாதா ராயப்பனாக விஜய். அவருடைய மகன் மைக்கேலாக வரும் இன்னொரு விஜய் கால்பந்து விளையாட்டு வீரர். மகனை தேசிய போட்டியில் பங்கெடுக்க வைத்து கோப்பையை வாங்க வேண்டும் என்பது ராயப்பன் ஆசை. இதற்காக தனது தாதா கறை படியாமல் வளர்க்கிறார்.

பதிவு: அக்டோபர் 28, 01:40 PM

ஹாலிவுட் பாணியில் கதாநாயகி மற்றும் பாடல்கள் இல்லாத-விறுவிறுப்பான திரைக்கதையை கொண்ட படம் கைதி

கார்த்தி பத்து வருட ஜெயில் தண்டனையை முடித்து விட்டு, அவருடைய ஒரே மகளை பார்ப்பதற்கு வெளியே வருகிறார். அவரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் பிடித்து வைக்கிறது. அந்த சமயத்தில் போலீசார் பல கோடி மதிப்புள்ள போதை மருந்தை மடக்கி பிடித்து, பாதுகாப்பாக ஒரு கட்டிடத்துக்குள் வைத்து பூட்டுகிறார்கள்.

பதிவு: அக்டோபர் 28, 01:37 PM

சாதி வெறியில் நடக்கும் கொலைகள் படம் அசுரன் - விமர்சனம்

தனுஷ்-மஞ்சுவாரியர் இருவரும் கணவர்-மனைவி. ஏழை விவசாய குடும்பம். இவர்களுக்கு டீஜய் அருணாசலம், கென் கருணாஸ் என 2 மகன்கள். ஒரே ஒரு மகளும் இருக்கிறாள்.

பதிவு: அக்டோபர் 07, 06:00 AM
மேலும் விமர்சனம்