முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடிக்க சரத்குமார்-சசிகுமார் இணையும் புதிய படம்


முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடிக்க சரத்குமார்-சசிகுமார் இணையும் புதிய படம்
x
தினத்தந்தி 22 April 2019 10:04 PM IST (Updated: 22 April 2019 10:04 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் சினிமாவில் குடும்ப உறவுகள் மற்றும் நட்பை சித்தரிக்கும் படங்களை தயாரித்து நடிப்பவர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள்.

தமிழ் சினிமாவில் குடும்ப உறவுகள் மற்றும் நட்பை சித்தரிக்கும் படங்களை தயாரித்து நடிப்பவர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள். அவர்களில் நடிகர்-தயாரிப்பாளர்-டைரக்டர் சசிகுமாரும் ஒருவர். இதுவே அனைத்து தரப்பு மக்களிடமும் அவரின் படங்களுக்கு எதிர்பார்ப்புகளை உருவாக்குகின்றன. அப்படி எதிர்பார்ப்புக்குரிய ஒரு புதிய படத்தில், சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடங் களில் சரத்குமார், டைரக்டர் பாரதிராஜா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சசிகுமார் கதாநாயகனக நடிக்கிறார். ‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல்குமார் டைரக்டு செய்கிறார். பி.கே ராம்மோகன் தயாரிக்கிறார். படத்தை பற்றி இவர் கூறியதாவது:-

“சசிகுமார் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார். காரணம், அவருடைய படங்கள் எப்போதும் குடும்பம் மற்றும் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகின்றன. திரையரங்க உரிமையாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் லாபத்தை சம்பாதித்து தரும் நடிகராக அவர் இருந்து வருகிறார். அப்படியே இந்த படத்திலும் இருக்கிறார்.

அவருடன் சரத்குமார், டைரக்டர் பாரதிராஜா ஆகிய இருவரும் முக்கிய வேடங் களில் இணைந்து நடிக்கிறார்கள். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. தொடர்ந்து மும்பை, தேனி ஆகிய இடங்களில் படம் வளர இருக்கிறது.”
1 More update

Next Story