இராவண கோட்டம்


இராவண கோட்டம்
x
தினத்தந்தி 11 May 2019 4:49 PM GMT (Updated: 2019-05-11T22:19:32+05:30)

சாந்தனு-ஆனந்தி ஜோடியுடன் `இராவண கோட்டம்' பூர்வீக பின்னணியில் உருவாகும் படங்கள் எப்போதும் யதார்த்த சினிமாவின் ஆதாரமாக அமைந்திருக்கின்றன.

ஒவ்வொரு பிராந்தியத்திலும் தனித்துவமான கலாசாரம், ரசனை மற்றும் பாரம்பரிய காரணிகள் உள்ளன. இந்த அம்சங்களை கொண்டு உருவாகும் சில படங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். அத்தகைய படங்களை உருவாக்க சில டைரக்டர்கள் முயற்சிக்கிறார்கள். அந்த வகையில் தற்போது, `மதயானைக் கூட்டம்' புகழ் விக்ரம் சுகுமாரன், `இராவண கோட்டம்' என்ற படத்தை டைரக்டு செய்கிறார்.

இதில், சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். படம் முழுக்க சாந்தனு பாக்யராஜ் வேட்டி-சட்டையில் வருவதால், அவர் கடந்த சில மாதங்களாக வேட்டி-சட்டையிலேயே நடமாடுகிறார். ராமநாத புரத்தின் பேச்சு வழக்கில்தான் உரையாடுகிறார்.

அப்பாவித்தனம் மற்றும் குருட்டு தைரியம் கலவையாக கொண்ட ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஆனந்தி நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கண்ணன் ரவி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.

Next Story