மிருகா


மிருகா
x
தினத்தந்தி 12 Sept 2019 9:43 PM IST (Updated: 12 Sept 2019 9:43 PM IST)
t-max-icont-min-icon

ஊர் ஊராக சென்று பெண்களை ஏமாற்றும் காதல் மன்னனாக ஸ்ரீகாந்த். படம் "மிருகா" அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில், கதைநாயகியாக ராய் லட்சுமி நடிக்கிறார். படத்தின் சினிமா முன்னோட்டம்.

ஊர் ஊராக சென்று பெண்களை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளும் காதல் மன்னனாக ஸ்ரீகாந்த், ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில், கதைநாயகியாக ராய் லட்சுமி நடிக்கிறார். படத்துக்கு, ‘மிருகா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. எம்.வீ.பன்னீர்செல்வம் கதை-திரைக்கதை-ஒளிப்பதிவு ஆகிய பொறுப்புகளை ஏற்க, ஜே.பார்த்திபன் டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி அவர் சொல்கிறார்:-

‘‘குரூர எண்ணம் கொண்ட ஒரு கொலைகாரன் தனது அழகு, பழகும் பண்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, பல பெண்களை ஏமாற்றி வாழ்ந்து வரு கிறான். அப்படி ஒரு முயற்சியின்போது, ஒரு பெண்ணை காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான். அவளையும் அவன் ஏமாற்ற நினைக்கும்போது, விதி வேறு விதமாக நினைக்கிறது.

ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறோம். ஒரு பூனையும், எலியும் கதை போல் படத்தின் திரைக்கதை வேகமாக நகரும்.

சென்னை, பொள்ளாச்சி, மூணாறு, தலக்கோணம், ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.

ஸ்ரீகாந்த்-ராய் லட்சுமியுடன் பல புதுமுகங்கள் இணைந்து நடித்து இருக்கிறார்கள். பி.வினோத் ஜெயின், நரேஷ் ஜெயின் ஆகிய இருவரும் தயாரித்து வருகிறார்கள்.’’

1 More update

Next Story