காப்பான்


காப்பான்
x
தினத்தந்தி 25 Sept 2019 9:14 AM IST (Updated: 25 Sept 2019 9:14 AM IST)
t-max-icont-min-icon

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, சாயிஷா, ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் காப்பான் படத்தின் முன்னோட்டம்.

என்.ஜி.கே.வை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள படம் ’காப்பான்’. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சூர்யாவை வைத்து அயன், மாற்றான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா சய்கல் நடித்துள்ளார். மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்துள்ளார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். தீவிரவாதத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.  ஒளிப்பதிவு எம்.எஸ். பிரபு.
1 More update

Next Story