ராஜாவுக்கு செக்


ராஜாவுக்கு செக்
x
தினத்தந்தி 24 Jan 2020 12:05 AM GMT (Updated: 24 Jan 2020 12:05 AM GMT)

சாய்ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகி இருக்கும் ’ராஜாவுக்கு செக்’ படத்தின் முன்னோட்டம்.

பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ராஜாவுக்கு செக். இப்படத்தில் சேரன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சராயூ மோகன், நந்தனா வர்மா நடிக்க, முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். ’ஜெயம்’ ரவி நடித்த ‘மழை’ என்கிற படத்தை இயக்கிய சாய்ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சுண்டாட்டம், பட்டாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இர்பான் வில்லனாக நடித்திருக்கிறார்.

தெலுங்கில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர் வினோத் யஜமானியா இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். 

Next Story