நட்சத்திரா


நட்சத்திரா
x
தினத்தந்தி 24 Jan 2020 10:39 PM IST (Updated: 24 Jan 2020 10:39 PM IST)
t-max-icont-min-icon

`மைனா' படத்தின் மூலம் பிரபலமான விதார்த் இப்போது, `நட்சத்திரா' படத்தில் நடித்து வருகிறார். இது, மர்மங்கள் நிறைந்த மாயாஜால படம். இதில் விதார்த் துப்பறிவது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

`நட்சத்திரா' மர்மங்கள் நிறைந்த மாயாஜால படத்தில், விதார்த்!
கதையின் பின்னணியில், பெண் ஆவிகள் இருக்கும். இதுபற்றி படத்தின் டைரக்டர் மனோஜ்ராம் சொல்கிறார்:-

``நட்சத்திரா, மர்மங்கள் நிறைந்த திகில் படமாக உருவாகி வருகிறது. படம் பார்ப்பவர்களை பயமுறுத்தும் வகையில் பல காட்சிகள் இருக்கும். விதார்த்தின் அர்ப் பணிப்பும், அவர் நடிப்பின் மீது கொண்டிருக்கும் தீவிர காதலும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கும். அவரது கதாபாத்திரம் சில வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று. படம் முடிந்து வெளியே வந்த பிறகும் அவருடைய கதாபாத்திரம் அனைவரின் நெஞ்சிலும் நிலைத்திருக்கும். `நெடுநல்வாடை' புகழ் அஞ்சலி நாயர், விதார்த் ஜோடியாக நடிக்கிறார். சென்ட்ராயன், சந்தோஷ் பிரதாப், சங்கிலி முருகன், `ஆடுகளம்' நரேன், லட்சுமி ப்ரியா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித் துள்ளனர். பிரேம்நாத், வெள்ளை சேது ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.''
1 More update

Next Story