பேப்பர் பாய்


பேப்பர் பாய்
x
தினத்தந்தி 24 Jan 2020 10:54 PM IST (Updated: 24 Jan 2020 10:54 PM IST)
t-max-icont-min-icon

`கடுகு,' `கோலி சோடா-2' ஆகிய படங்களில் உதவி டைரக்டராக பணிபுரிந்த ஸ்ரீதர் கோவிந்தராஜ், `பேப்பர் பாய்' என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார்.

படக்குழுவினரின் பாராட்டை பெற்ற கதாநாயகன்!

`கடுகு,' `கோலி சோடா-2' ஆகிய படங்களில் உதவி டைரக்டராக பணிபுரிந்த ஸ்ரீதர் கோவிந்தராஜ், `பேப்பர் பாய்' என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார். இதில் கதாநாயகனாக சுவாதிஷ் ராஜாவும், கதாநாயகியாக யாமினி பாஸ்கரும் நடிக்கிறார்கள்.

படத்தை பற்றி டைரக்டர் ஸ்ரீதர் கோவிந்தராஜ் கூறும்போது, ``அன்றாடம் நாம் சந்திக்கும் ஒரு சராசரி இளைஞருக்கும், கோடீஸ்வரர் பெண்ணுக்குமான காதல்தான் படத்தின் கதை. காதலுக்கும், பாடலுக்கும் முக்கியத்துவம் உள்ள படமாக பழனிராஜன் தயாரித்து இருக்கிறார். `தலைவாசல்' விஜய், கோலி சோடா' சுஜாதா ஆகிய இருவருடனும் கதாநாயகன் சுவாதிஷ் ராஜா நடித்த காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. அதில் சிறப்பாக நடித்ததற்காக, சுவாதிஷ் ராஜாவை படக்குழுவினர் அனைவரும் பாராட்டினார்கள்'' என்றார்.
1 More update

Next Story