மூக்குத்தி அம்மன்


மூக்குத்தி அம்மன்
x
தினத்தந்தி 24 Jan 2020 11:10 PM IST (Updated: 24 Jan 2020 11:10 PM IST)
t-max-icont-min-icon

விரதம் இருந்து நடிக்கிறார் ``நயன்தாராவின் அர்ப்பணிப்பை வார்த்தைகளில் சொல்ல முடியாது'' -ஆர்.ஜே.பாலாஜி - மூக்குத்தி அம்மன் சினிமா முன்னோட்டம்.

நயன்தாரா தற்போது, `மூக்குத்தி அம்மன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர், அம்மன் வேடம் ஏற்றுள்ளார். 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. இதுபற்றி படத்தின் நாயகனும், டைரக்டருமான ஆர்.ஜே.பாலாஜி சொல்கிறார்:-

``இந்த படத்துக்காக நயன்தாரா தந்திருக்கும் அர்ப்பணிப்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அம்மன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, அவர் விரதம் இருந்திருக்கிறார். தனது முழு உழைப்பையும் கொடுத்து இருக்கிறார். இது, அவருடைய சினிமா வாழ்வில், வெகு முக்கியமான படமாக இருக்கும். அவர் நடிக்கும் கதாபாத்திரம், படத்துக்கு பெரும் பலமாக இருக்கும்.

ஐசரி கே.கணேஷ் போன்ற ஒரு தயாரிப்பாளர் இருந்தால், படப்பிடிப்பில் எதற்கும் கவலைப்பட தேவையில்லை. நடிகர்-நடிகைகளின் கால்ஷீட்டை வீணாக்காமல் படக்குழுவினர் அனைவரும் வேலை செய்து வருகிறோம். படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவது ஒன்றுதான் எங்கள் குறிக்கோள். அவர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்வோம்.

படத்தில் மவுலி, ஊர்வசி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சரவணனுடன் இணைந்து நான் இயக்குகிறேன்'' என்று ஆர்.ஜே.பாலாஜி கூறினார்.

``ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தை வைத்துக் கொண்டு இந்த படக்குழு இவ்வளவு சீக்கிரமாக முக்கால்வாசி படத்தை முடித்திருப்பது எனக்கு பெரும் ஆச்சரியமே...'' என்கிறார், தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ்.
1 More update

Next Story