டே நைட்


டே நைட்
x
தினத்தந்தி 25 Jan 2020 10:58 PM IST (Updated: 25 Jan 2020 10:58 PM IST)
t-max-icont-min-icon

நீண்ட இடைவெளிக்குப்பின் என்.கே.கண்டி தனது அடுத்த படத்தை இயக்குகிறார். படத்துக்கு, ‘டே நைட்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

புதுமுகங்களை வைத்து இயக்குகிறார் ‘கெட்டவன்’ பட டைரக்டரின் புதிய படம், ‘டே நைட்’

சிம்புவை வைத்து, ‘கெட்டவன்’ படத்தை டைரக்டு செய்தவர், என்.கே.கண்டி. அந்த படம் ஆரம்ப கட்ட வேலையுடன் நின்று போனது. நீண்ட இடைவெளிக்குப்பின் என்.கே.கண்டி தனது அடுத்த படத்தை இயக்குகிறார். படத்துக்கு, ‘டே நைட்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. கதை, திரைக்கதை, வசனமும் இவரே எழுதியிருக்கிறார். படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-

“ஆஸ்திரேலியாவின் கிராமப்புறங்களில் 2 மாத காலங்கள் தங்கியிருந்து எடுக்கப்பட்ட படம், இது. மிக குறைந்த முதலீட்டில், மிக குறைந்த தொழிலாளர்களுடன், இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதில் நடித்தவர்கள் அனைவருமே புதுமுக நடிகர்கள்.

இது, ஒரு ‘சைக்கோ’ திகில் படம் என்பதை விட, ‘மர்டர் மிஸ்டரி’ (கொலையை அடிப்படையாக கொண்ட படம்) என்று சொல்லலாம். படத்தில் பாடல் காட்சிகள் எதுவும் இல்லை. திகிலும், திருப்பங்களும் நிறைந்த திரைக்கதை. 2018-ம் ஆண்டில் நடந்த ஒரு கொலை சம்பவத்தை புலனாய்வு செய்து தேடி கண்டுபிடிப்பதே அந்த கதை.

படத்தில் வரும் ஒரே ஒரு கதாபாத்திரத்தை தவிர, மற்ற எல்லா கதாபாத்திரங்களும் கொலை செய்யப்பட்டு விடுகிறார்கள். எப்படி கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை திகிலுடன் சொல்லியிருக்கிறோம். புதுமுகங்கள் ஆதர்ஸ், அன்னம் ஷாஜன் கதாநாயகன்-காதாநாயகியாக நடித்துள்ளனர். ஆதர்ஸ், பின்னி மேத்யூ, விபின்தாமஸ் ஆகிய மூவரும் தயாரித்துள்ளனர்.”
1 More update

Next Story