ஊட்டி குளிரில் நடுங்கியபடி நடித்த 2 கதாநாயகிகள்!


ஊட்டி குளிரில் நடுங்கியபடி நடித்த 2 கதாநாயகிகள்!
x
தினத்தந்தி 25 Jan 2020 11:04 PM IST (Updated: 25 Jan 2020 11:04 PM IST)
t-max-icont-min-icon

டைரக்டர் ரஞ்சித் ஜெயக்கொடி, ஒரு புதிய படத்தை இயக்கி முடித்து இருக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சினிமா முன்னோட்டம்.

பருவ நிலை மாறுபாடுகள் கொண்ட சூழலிலும் ஊட்டியில் திட்டமிட்டபடி, மிக குறுகிய காலத்துக்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்து இருக்கிறார். இதுகுறித்து ரஞ்சித் ஜெயக்கொடி சொல்கிறார்:-

“ஊட்டியில் மிகவும் பனிசூழ்ந்த சிரமமான சுற்றுப்புற சூழலில், 30 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். கடும் பனிப்பொழிவில் கதாநாயகிகள் பிந்துமாதவி, தர்ஷனா பானிக் ஆகிய இருவரும் குளிரில் நடுங்கிக் கொண்டே நடித்தார்கள். அவர்களை வைத்து முழு படப்பிடிப்பையும் ஊட்டியில் நடத்தி முடித்து விடுவோமா என்ற சந்தேகம் எனக்குள் ஏற்பட்டது.

பனிப்பொழிவைப்போல் எங்களுக்கு பல்வேறு தடைகளும் ஏற்பட்டன. படக்குழுவினரின் ஆதரவு அற்புதமாக இருந்தது. அனைவரின் அர்ப்பணிப்பான உழைப்பால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.

2 சகோதரிகளை சுற்றி பின்னப்பட்ட கதை, இது. இருவரும் தங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்க சொந்த ஊருக்கு போகிறார்கள். அங்கு அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைதான் கதை. சகோதரிகளாக பிந்து மாதவியும், தர்ஷனா பானிக்கும் நடித்துள்ளனர்.”
1 More update

Next Story